Breaking News - 3ஆவது இறுதிப்போட்டியாளராக யோகஸ்ரீ தெரிவு

இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிழ்ச்சியாக, இந்த சி தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா ரியால்ட்டி சோ காணப்படுகின்றது.


நான்காவது சீசனாக இடம்பெறும் சரிகமபா லிட்டில் சாம்ப், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த போட்டியில் தற்போது 11 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். அதில் இருவர் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


அதில் முதலாவது இறுதி போட்டியாளராக ஹிமித்ரா தெரிவு செய்யப்பட்டதோடு, அதற்கு அடுத்தவாரம் இரண்டாவது இறுதிப் போட்டியாளராக ஸ்ரீமதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்நிலையில் இந்தவாரம் மூன்றாவது இறுதி போட்டியாளருக்கு சுற்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான புரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.


இந்தவாரம் மூன்றாவது இறுதிப் போட்டியாளராக மக்களால் அதிகம் வாக்களித்த நபர் தெரிவு செய்யப்படுகின்றார்.


அதற்காக இந்தவாரம் சரிகமபா லிட்டில் சாம்ப் நிகழ்வில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடலை பாடி, கோல்ட் சவர்களை வென்றவர்களில் இருந்து ஒருவர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.


மூன்றாவதாக  தெரிவாகியுள்ள இறுதிப்போட்டியாளர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையே தெரியவரும் என்றால் அந்த போட்டியாளர் யார் என்பது தொடர்பான தகவல்கள் எமது கிடைக்கப்பெற்றுள்ளன.


மக்கள் விருப்பத்துக்குரிய இந்த சுற்றில் சிறப்பாக பாடல்கள் பாடி, கோல்டன் சவர் பெற்ற 6 போட்டியாளர்களில் இருந்து மூன்றாவது இறுதிப்போட்டியாளராக யோகசிஸ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.


அதனடிப்படையில் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளராகவும் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றவராகவும் யோகசிஸ்ரீ  மூன்றாவது இறுதிப்போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.